சேலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தாக நிதி நிறுவன உரிமையாளர் கைதாகி உள்ளார்.
கே.பி. கரடை சேர்ந்த ஜவ்வரிசி வியாபாரி காளியப்பன் நெத்திமேட்டில் உள்ள ராஜவேல் பாபு என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் 2021-ம் ஆண்டில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
பின்னர் மாதம் 26 ஆயிரம் ரூபாய் வீதம் 10 தவணைகளில் அவர் அந்த தொகையை திருப்பி செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் மேலும் 1 லட்சம் ரூபாய் கேட்டு கடந்த 9-ம் தேதி ராஜவேல் பாபு மிரட்டல் விடுத்ததாக காளியப்பன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் மிரட்டல் விடுத்தது உறுதியானதையடுத்து ராஜவேல் பாபு கைது செய்யப்பட்டார்.