கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், கரையாளனூர் நடுத்தெருவைச சேர்ந்தவா் முருகன். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் 2 வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ராஜேஸ்வரி ஐந்துமாத கர்ப்பிணியாக உள்ளார்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராற்றால் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.