அமெரிக்காவில் பெருகிவரும் கடுமையான துப்பாக்கி சூடு கலாச்சாரத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் பேரணி போராட்டத்தில் சனிக்கிழமையன்று ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் டெஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரத்தை கண்டித்து அதற்கு எதிரான குரல்களை எழுப்ப தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பார்க்லேண்ட் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்தவர்களால் நிறுவப்பட்ட மார்ச் ஃபார் எவர் லைவ்ஸ் (March For Our Lives)என்ற துப்பாக்கி பாதுகாப்புக் குழு சனிக்கிழமையன்று அமெரிக்காவில் 450 பேரணி போராட்டங்களை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
REUTERS
அதனடிப்படையில், கடுமையான துப்பாக்கி சட்டத்திற்கு எதிராக வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற கடுமையான துப்பாக்கி சட்டத்திற்கு எதிரான பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த பிரம்மாண்ட பேரணி குறித்து தலைமை போராட்ட குழு தெரிவித்த கருத்தில், மக்கள் தொடர்ந்து இறந்து கொண்டு இருக்கும் போது துப்பாக்கி சட்டம் தொடர்பாக அமெரிக்க அரசியல்வாதிகளை ஒதுங்கிக் கொள்ள விடமாட்டோம் என தெரிவித்தது.
அத்துடன் அரசியல் தலைவர்களின் செயலற்ற தன்மை அமெரிக்கர்களைக் கொன்று வருவதாகவும் மார்ச் ஃபார் எவர் லைவ்ஸ் (March For Our Lives) போராட்ட குழு தெரிவித்தது.
REUTERS
இந்நிலையில், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரிப்பதாகவும், துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: தீர்ந்து வரும் வெடிமருந்துகள்…உக்ரைனில் வேகமாய் முன்னேறும் ரஷ்ய படைகள்: அதிகரிக்கும் பதற்றம்!
REUTERS
மேலும் வாஷிங்டன் டிசியில் போராட்டக்காரர்களிடம் பேசிய பார்க்லேண்ட் துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான டேவிட் ஹாக், உவால்டேவில் குழந்தைகள் கொல்லப்பட்டது, எங்களை ஆத்திரத்திலும், மாற்றத்திற்கான கோரிக்கையையும் நிரப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.