மதுபோதையில் பீர்பாட்டிலால் அரசு பேருந்தின் கண்ணாடியை சிறுவர்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளகுறிச்சி துருகம் சாலையில் நள்ளிரவில் நான்கு சிறுவர்கள் மதுபோதையில் சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தை நிறுத்த முயன்றனர். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் வைத்திருந்த பீர் பாட்டிலை அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது வீசி உள்ளனர்.
இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதில், காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நான்கு சிறுவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்விநிலையங்கள் போகின்ற வயதில் மதுபாட்டிலுடன் சாலையில் அமர்ந்து ரகளையி ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.