நுபுர் சர்மாவை இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட காஷ்மீர் யூடியூபர் கைது செய்யப்பட்டார்.
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவின் உருவச்சிலையின் தலையை துண்டிப்பதை போன்று டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவை யூடியூபர் பைசல் வானி வெளியிட்டிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளான ஆனதை அடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு பைசல் வானி புதிய வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், வதந்தி பரப்புதல், குற்றம் கருதி மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பைசல் வானியை காவல்துறையினர் கைது செய்தனர்.