சினிமா எச்சரிக்கை வாசகம் தொடர்பான வழக்கு : நீதிமன்றம் தள்ளுபடி
திரையரங்குளில் திரைப்படங்கள் திரையிடப்படும்போது புகைபிடிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ வரும்போது திரையின் இடது ஓரத்தில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறுவது வழக்கத்தில் இருக்கிறது.
இதேபோன்று சண்டை காட்சிகள் வரும்போதும், ரத்தம் காட்டப்படும்போது. இந்த காட்சிகளில் வரும் ஆயுதங்கள் காகித அட்டையில் செய்யப்பட்டவை, ரத்தம் வெறும் கலர்பொடி என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் “தகுந்த ஆதாரம் இன்றி பொதுநல வழக்கு தொடரக்கூடாது. அதுவும் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.