பிரித்தானியாவில் உள்ள வேல்ஷ் கடற்கரையில் கடலில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றிய தந்தை ஹைவல் மோர்கன் பரிதாமாக உயிரிழந்தார்.
பிரித்தானியாவில் வேல்ஷ் கடற்கரையின் பெம்ப்ரோக்ஷயரில் உள்ள பாப்பிட் சாண்ட்ஸ், செயின்ட் டாக்மெயில்ஸ் என்ற கடல் பகுதியில் தண்ணீரில் சிக்கி கொண்ட குழந்தைகளை காப்பாற்றுவதில் ஈடுபட்ட தந்தை ஹைவல் மோர்கன்(47) வெள்ளிக்கிழமை பரிதாபமாக கடலில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் ஹைவல் மோர்கன் காப்பாற்றிய இரண்டு குழந்தைகளும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த தகவலில், துரதிர்ஷ்டவசமாக அவசர சேவைகள் விரைவாக செயல்பட்டும், உள்ளூர் மக்கள் ஹைவல் மோர்கனை கடலில் இருந்து இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணியளவில் சம்பவ இடத்திற்கு விமான ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாகவும் Dyfed-Powys பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், ஹைவல் மோர்கனின் இழப்பு குறித்து வருத்தம் தெரிவித்த அவரது குடும்பத்தினர், மோர்கனை ஹீரோ என வர்ணித்தனர், மேலும் எங்களுக்கு வலி மற்றும் துக்கம் இருக்கும் போதிலும், மோர்கனின் தன்னலமின்றி பிற உயிர்களை காப்பாற்ற முயற்சித்தது எங்களுக்கு ஆறுதல் தருகிறது என தெரிவித்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனிய மக்களுக்கு வழங்கப்படும் ரஷ்ய பாஸ்போர்ட்கள்: உச்சத்தை தொட்ட புடினின் அத்துமீறல்!
இதனைத் தொடர்ந்து அர்ப்பணிப்பு மற்றும் அன்பான தந்தை என்று உள்ளூர் மக்களால் வர்ணிக்கப்பட்ட மோர்கனுக்கு தகுந்த முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.