ரஷ்ய படையெடுப்பால் இதுவரை கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்கள்: வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு


உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தரப்பில் முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் முதன்மை ஆலோசகர் Oleksiy Arestovych என்பவரே குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் சராசரியாக 100 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ரஷ்யா தரப்பில் மூன்று மடங்கு வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்கள் எண்ணிக்கை 15,000 மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்ய படையெடுப்பால் இதுவரை கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்கள்: வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

இதனிடையே மார்ச் மாதத்திற்கு பின்னர் ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை எதையும் வெளியிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவால் மரணதண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய வீரர்கள் தொடர்பில், சாத்தியமான அனைத்து உதவிகளையும் முன்னெடுப்பதாக உக்ரைன் உறுதி அளித்துள்ளது.

பிரித்தானிய முன்னாள் வீரர்கள் ஷான் பின்னர் மற்றும் ஐடன் அஸ்லின் ஆகியோர் தற்போது ரஷ்ய நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.

ரஷ்ய படையெடுப்பால் இதுவரை கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்கள்: வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

ரஷ்யாவின் கூற்றுப்படி, இருவரும் கூலிப்படையினர் எனவும், ரஷ்யாவுக்கு எதிராக அதிகாரத்தை கைப்பற்ற களமிறக்கப்பட்டவர்கள் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால் குறிப்பிட்ட இருவரும் 2018ல் இருந்தே தங்கள் வாழ்க்கை துணையுடன் உக்ரைனில் வசித்து வருகின்றனர்.
மட்டுமின்றி, உக்ரைன் இராணுவத்தில் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றியும் வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ரஷ்யா சாதகமான முடிவெடுக்கும் என்றே நம்புவதாக குறித்த இரு வீரர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

ரஷ்ய படையெடுப்பால் இதுவரை கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்கள்: வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.