ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து அடிக்கடி பல விதமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. உக்ரைன் போரின் மத்தியில், புடினின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஒரு புதிய அறிக்கை கூறியுள்ளது.

முன்னதாக, புடினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, ​​முன்னாள் KGB உளவாளியிடம் ரஷ்யாவிடம் அதிகாரம் ஆட்சியை ஒப்படைப்பதாக வதந்தி பரவியது. ஆனால் அத்தகைய அறிக்கை எதுவும் ரஷ்ய அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

புடினை  ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்

உக்ரைன் போர் குறித்து தனது ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போது புடினின் உடல்நிலை மோசமடைந்ததாக புதிய அறிக்கை கூறுகிறது. கூட்டத்தின் போது அவர் மயங்கி விழும் நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது இதையடுத்து, நீண்ட நேரம் பொது இடங்களில் செல்ல வேண்டாம், வீட்டிலேயே  ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | புற்று நோயால் ரஷ்ய அதிபரின் உடல் நிலை மோசமாகிறதா… வெளியான அதிர்ச்சித் தகவல்

ராணுவ ஆலோசகர்களுடன் வீடியோ கான்பரன்சிங் செய்யும் போது புடின் கிட்டதட்ட கீழே விழும் நிலைக்கு சென்றததாக டெலிகிராம் சேனல் ஒன்றில் தகவல் வெளியானது. இருப்பினும், புட்டினின் உடல்நிலை குறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்… வெளியான அதிர்ச்சித் தகவல்

புடினின் சமீபத்திய புகைப்படங்களில் பலகீனமான தோற்றம்

ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்து ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், அவரது அலுவலகம் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. இருப்பினும், கடந்த காலங்களில் வந்த சில படங்களில், புடின் முன்பு போல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இல்லை என்பது தெரிகிறது.

சமீபகாலமாக ரஷ்ய அதிபரின் முகம் வீங்கி இருப்பது போன்று தோற்றமளிக்கும் பல படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. சில சமயங்களில் அவர் உடல் நிலை சரியில்லாதது போல் உள்ளது. புடினுக்கு புற்றுநோய் மற்றும் பார்கின்சன் போன்ற கடுமையான நோய்கள் இருப்பதாக டெய்லி மெயில் செய்தி ஏற்கனவே கூறியுள்ளது.

மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.