ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா

கொல்கத்தா,

18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 3-வது கட்ட தகுதி சுற்றின் ‘டி’ பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் தனது தொடக்க ஆட்டத்தில் கம்போடியாவை தோற்கடித்த இந்திய அணி நேற்று ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி 5 நிமிடங்கள் தான் முடிவை தீர்மானிப்பதாக அமைந்தது. 86-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி ‘பிரிகிக்’ வாய்ப்பில் பிரமாதமாக கோல் போட்டார்.

அடுத்த இரு நிமிடங்களில் ஆப்கானிஸ்தானின் ஜூபைர் அமிரி பதிலடி கொடுத்தார். இதன் பின்னர் கடைசி நிமிடத்தில் இந்தியாவின் அப்துல் சமாத் கோல் திருப்பினார். முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் 2-வது வெற்றியை பெற்று பிரதான சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.