கூகுள் பே, போன்பே போன்ற UPI சேவையை பயன்படுத்துபவரா நீங்க.. இந்த 5 விஷயங்களை சரியா செய்ங்க!

கால்கடுக்க பல மணி நேரங்கள் காத்திருந்து வங்கிகள் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் இருந்த காலம் போய், இன்று இருந்த இடத்தில் இருந்து நிமிடங்களில் யுபிஐ சேவை மூலம் பணம் அனுப்பும் பரிமாற்ற முறையானது பெரும் பிரபலமாகி வருகின்றது.

அதுவும் குறிப்பாக நகரப்பகுதிகள் காலையில் பால் வாங்குவது தொடங்கி, உணவருந்தும் ஹோட்டல்களில் பில்கள், மளிகை பொருட்கள், மொபைல் ரீசார்ஜ், டிடிஹெச், மின் கட்டணம் எனப் பற்பல சேவைகளையும் ஒரே ஆப்பில் செய்து கொள்ளலாம்.

பிக்சட் டெபாசிட் செய்யபோறீங்களா.. எந்த வங்கியில் என்ன விகிதம்..டாப் லிஸ்ட் இதோ!

பிரம்மாண்ட வளர்ச்சி

பிரம்மாண்ட வளர்ச்சி

அதோடு ஒரு படி மேலே போய் முதலீடுகளும் செய்யும் அளவுக்கு இந்த ஆஃப்கள் சேவை செய்து வருகின்றன. சில யுபிஐ தளங்களில் தங்கம் கூட வாங்கி சேமிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இப்படி தொட்டதற்கெல்லாம் UPI சேவைகளை பயன்படுத்தும் மக்கள் எப்படி மோசடிகளில் இருந்து தப்பிப்பது வாருங்கள் பார்க்கலாம்.

யுபிஐ பின்

யுபிஐ பின்

பொதுவாக வங்கி நெட்பேங்கினை விட இந்த யுபிஐ தளங்கள் பயன்படுத்த எளிதில் பயன்படுவதால், குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்டன. அப்படிப்பட்ட இந்த யுபிஐ தளத்தில் பின் நம்பரை யாரிடமும் பகிர கூடாது. எந்த தனியார் வங்கியோ அல்லது பொதுத்துறை வங்கியோ, அரசு தரப்போ யாரும் உங்களிடம் பின் நம்பரை கேட்க மாட்டார்கள், ஆக அப்படி ஏதேனும் பின் நம்பரை கேட்டு உங்களுக்கு போன் காலோ அல்லது மெசேஜ் வந்தாலோ கவனமாக இருங்கள். அதேபோல எப்போதும் உங்களது எஸ் எம் எஸ்களை கவனமாக பாருங்கள். இதுபோன்ற மோசடிகள் கால்களோ மேசேஜ்களோ வந்தால் உடனடியாக வங்கி கவனத்திற்கோ அல்லது தொடர்புடைய நிறுவனத்திற்கோ கொண்டு செல்லுங்கள்.

எதையும் யாரிடமும் கொடுக்காதீர்கள்?
 

எதையும் யாரிடமும் கொடுக்காதீர்கள்?

சில நேரங்களளில் ஏதேனும் விவரங்கள் தெரியாவிடில் நாம் வங்கி ஊழியர்களிமோ, கஸ்டமர் சர்வீஸ் செய்பவர்களிடமோ உங்களது மொபைலையோ அல்லது கணினியையோ பகிராதீர்கள். இதன் மூலம் உங்களது சிஸ்டமிலோ அல்லது கணினியிலோ எளிதில் மோசடியில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

தேவையில்லாத தளங்களை பார்ப்பதை தவிருங்கள்

தேவையில்லாத தளங்களை பார்ப்பதை தவிருங்கள்

சோதனை பரிவர்த்தனை செய்வதன் மூலம் கேஷ் பேக், ரீவார்டுகள் உள்ளிட்ட பல சலுகைகளை கொடுக்கும் தளங்களுக்கு செல்லாதீர்கள். அவர்கள் உங்களது பின் நம்பரை சேகரிக்கலாம். அதன் மூலம் மோசடி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பின் மாற்றம்

பின் மாற்றம்

உங்களது யுபிஐ பின்னை ஒவ்வொரு மாதமும் மாற்றுங்கள். குறைந்தபட்சம் ஒரு காலாண்டுக்கு ஒரு முறையேனும் மாற்றுங்கள். இது உங்கள் கணக்கினை பாதுகாக்க உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Are you a user of UPI service like Google Pay, PhonePe? Do these 5 things right

Any kind of problems can come when using UPI service like Google Pay, PhonePe. How to be safe from it.

Story first published: Sunday, June 12, 2022, 15:33 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.