சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனாலும் ஐநாவின் அதிகாரபூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளே உள்ளன.
இந்த ஆறு மொழிகளை தவிர பிற மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அத்துடன் இதுதொடர்பாக ஐ.நா. பொதுசபையில் தீர்மானமும் தாக்கல் செய்யப்பட்டது..
இந்த தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பன்மொழி பயன்பாட்டை முன்மொழியும் இந்தத் தீர்மானத்தில் ஹிந்தி, உருது மற்றும் வங்க மொழி குறிப்பிடப்பட்டுள்ளன.
வட கொரியாவில் வரலாற்று நிகழ்வு – வெளியுறவு அமைச்சராக பெண் நியமனம்!
இதன் மூலம், பன்மொழி பயன்பாடு என்பது ஐ.நா.வின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஐ.நா. பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவி்த்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ரஷியா, அரபு, சீனம் ஆகியவையும், ஐக்கிய நாடுகள் தலைமை செயலகத்தின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.