சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்த்துறை செயலாளராக மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசு, புதிய உள்துறை செயலாளராக பணீந்திர ரெட்டியை நியமித்துள்ளது.
மாநிலத்தில் 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருவாய் நிர்வாகத்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகரும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக பிரதீப் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனார்.
மேலும், திருச்சி ஆட்சியராக பிரதீப் குமார், தருமபுரி ஆட்சியராக சாந்தி, ராமநாதபுரம் ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.