மனிதாபிமானம் என்பது இன்றும் சற்று உள்ளது என்பதற்கு சிறந்த சாட்சி இந்த பதிவு எனலாம்.
ஏனெனில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துரிதமாக செயல்பட்டு, சில நொடிகளில் ஒருவரின் உயிரை காப்பாற்றிய இளைஞரின் மனிதாபிமானத்திற்கு உண்மையில் ஹேட்ஸ் ஆப் சொல்ல வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பு சிகாகோ ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் பலரின் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
முதலீட்டாளார்கள் கடும் வேதனை.. 5 அமர்வுகளில் ரூ.5.16 லட்சம் கோடி இழப்பு.. எல்ஐசி ரொம்ப மோசம் !
உயிரை காப்பாற்றிய இளைஞர்
இரு தரப்புக்கு இடையே நடந்த சண்டையின்போது ஒரு நபர் மின்சாரம் பாய்ந்த ரயில்வே தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளார். அதனை பார்த்த சிகாகோவை சேரந்த அந்தோனி பெர்ரி, என்ற 20 வயதான இளைஞர் தன் உயிரை கூட பொருட்படுத்தாமல் உயிருக்கு போராடியவரை குதித்து காப்பாற்றியுள்ளார்.
ஆடி கார் பரிசு
இவரின் அதிரடியான செயலை பலரும் பாராட்டி வரும் நிலையில், அவரை பாராட்ட நினைத்த நிறுவனம் ஒன்று அவருக்கு ஆடி காரினை பரிசாகவும், வன்முறைக்கு எதிரான ஒரு அமைப்பின் தலைவர் எர்லி வாக்கர் வழங்கியுள்ளார்.
பாராட்டுகளை காட்ட விருப்பம்
மேலும் இது குறித்து அந்த நிறுவனம், உங்களைப் போன்ற அதிகமானவர்கள் எங்களுக்கு தேவைப்படுவதால், நாங்கள் எங்கள் பாராட்டுகளை உண்மையில் காட்ட விரும்புகிறோம்., உலகில் எங்களுக்கு நிறைய அந்தோனிக்கள் தேவைப்படுகின்றனர் என கூறிய வாக்கர் பெர்ரிக்கு 25 டாலர் பெட்ரோல் கார்டினையும் கொடுத்த பிறகு தெரிவித்துள்ளார்.
மிக்க நெகிழ்ச்சி
இது குறித்து அந்தோனி, நாள் தோறும் தன் வீட்டிலிருந்து நகரத்தின் வெளியே இருக்கும் பணி செய்யும் இடத்திற்கு இரு ரயில்கள் மற்றும் பேருந்து மூலமாக பயணித்து செல்வேன். இந்த கார் எனது பயணத்தினை எளிதாக்கி விடும் என கூறியுள்ளார்.
இந்த பரிசு என்னை உணர்ச்சிவடப்பட வைத்துவிட்டது என தனது நெகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Audi car gift to a Chicago teenager who saved someone who fell off an electric rail track
Anthony Perry, a 20-year-old man from Chicago, jumped to the rescue of a man who was fighting for his life.