ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் போர் முனையில் முன்னாள் பிரித்தானிய வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் பிரித்தானிய இராணுவத்தில் இருந்து வெளியேறிய Jordan Gatley என்பவரே உக்ரைனின் Severodonetsk நகரில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த நிலையில், தீவிர ஆலோசனைகளுக்கு பின்னரே Jordan Gatley உக்ரைனுக்கு புறப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவலை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த குடும்பத்தினர், இவ்வாறான ஒரு தகவலை சமூக ஊடகத்தில் பதிவேற்றும் நிலை ஏற்படும் என ஒருபோதும் கருதியதில்லை எனவும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலரையும் சென்று சேர வேண்டிய தகவல் இதுவென கூறியுள்ளனர்.
மார்ச் மாதத்தில் பிரித்தானிய இராணுவத்தில் இருந்து விலகிய Jordan Gatley தமது சேவையை பிற பகுதிகளில் முன்னெடுக்க முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான படையெடுப்பு ஐரோப்பா மீதான போர் என Jordan Gatley கருதியதாலையே உக்ரைனுக்கு அவர் புறப்பட்டு சென்றதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவது மட்டுமல்ல, தாம் கற்றவையை உக்ரைன் வீரர்களுக்கு கற்றுத்தருவதையும் முதன்மை பணியாக செய்துள்ளார் Jordan Gatley.
ரஷ்யாவின் முக்கிய இலக்காக மாறியுள்ளது உக்ரைனின் Severodonetsk நகரம். தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாத ஆத்திரத்தை ரஷ்ய துருப்புகள் எஞ்சிய பகுதிகளில் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய வீரர் ஸ்காட் சிப்லி ரஷ்ய துருப்புக்களுடன் போரிடும்போது உக்ரைனில் கொல்லப்பட்ட முதல் இங்கிலாந்து உயிரிழப்பு என்று வெளியான தகவலை அடுத்து தற்போது Jordan Gatley கொல்லப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.