நாடுமுழுவதிலும் உற்பத்திசெய்யப்படாது கைவிடப்பட்டுள்ள அனைத்து வயல் காணிகளிலும் உற்பத்தியை மேற்கொள்வதற்காக 5வருடங்களுக்கு காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கும்.
கைவிடப்பட்ட பயிர்க் காணிகளின்எண்ணிக்கை 1 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை நெல்லை அரிசியாக்கி சந்தைக்குவிநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. சதொச கூட்டுறவு மற்றும் அங்காடி வர்த்தகவலைப்பின்னல் மூலம் இந்த அரிசியை விற்பனை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்சந்தைப்படுத்தும் சபையிடம் உள்ள 43 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்குவதற்குஎதிர்பார்க்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சிற்கு உட்பட்டஅனைத்து வெளிநாட்டு நிதி வசதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை இளைஞர்சமூகத்தை
இலக்காகக் கொண்டு ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்குஆலோசனை வழங்கியுள்ளார். இதில் இளைஞர் சமூகத்தை விவசாய நடவடிக்கைகளில் ஈர்க்கக்கூடியபுதிய திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உலக வங்கி, ஆசியஅபிவிருத்தி வங்கி, உலக உணவு மற்றும் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட சர்வதேசநிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் 6 திட்டங்கள் விவசாய அமைச்சிற்குஉட்பட்டதாகும். ‘தேசியவிவசாயத்தை’ தம்மால் மேம்படுத்த முடியும் என்ற இலக்கைபெரும்பாலான இளைஞர்கள் கொண்டுள்ளனர். இருப்பினும், தற்போது விவசாயத்தில் இவர்களதுபங்களிப்பு குறைவாகக் காணப்படுகின்றது. வெளிநாட்டுச் சந்தைகளுக்கு போட்டி மிகுந்த ஏற்றுமதியைமேற்கொள்ள முடியும். மிளகாய், பழவகை உற்பத்திதொடர்பிலும் கவனம் செலுத்துவது கட்டாயமாகும்.