சொன்ன வாக்கை நிறைவேற்றிய ராகவா லாரன்ஸ்
இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், சூர்யா , ரஜிஷா விஜயன்,பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ்,லிஜோ மோல் ஜோ நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு பின் பார்வதி அம்மாளின் கதை பலருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சென்னை முகலிவாக்கத்தில் மகள் வீட்டில் வசித்து வந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ஒரு லட்சம் வழங்கி அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க இருப்பதாக தெரிவித்தார். பிறகு தமிழக அரசே பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தர இருப்பதாக அறிவித்தது.
பின்னர் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக தான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்து இருந்தார் .
இந்நிலையில் பார்வதி அம்மாளின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து வீடு கட்டித்தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா , மற்றும் அவருடைய மகன் மகள்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார் .