போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து சிமெண்ட் லாரியை நிறுத்தி வைத்துக் கொண்டு வாக்குவாதம் செய்த குடிகார கிளீனரை போக்குவரத்து போலீஸ்காரர் விரட்டி விரட்டி எட்டிமிதித்த வீடியோ வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அன்னமய்யா சர்க்கிள் பகுதியில் நேற்று சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த கிஷோர் நாயுடு என்ற காவலர் லாரியை அங்கிருந்து எடுக்குமாறு கூறி உள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த கிளீனர், லாரியில் இருந்து இறங்கி வந்து போக்குவரத்து காவலரின் கையை பிடித்து பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த போக்குவரத்து காவலர் கிஷோர் நாயுடு குடிபோதையில் இருந்த கிளீனரை காலால் எட்டி உதைத்தார்
கீழே விழுந்து எழுந்த குடிகார கிளீனர் மீண்டும் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதால் அவரை விரட்டி விரட்டி எட்டி உதைத்தார் கிஷோர்
இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் என்னதான் பிரச்சனை என்றாலும் வழக்கோ அபராதமோ விதிப்பதை விட்டு, ஒரு முதியவரான லாரி க்ளீனரை ஏறி மிதித்து தாக்கிய சம்பவத்துக்கு கண்டம் தெரிவிக்கும் மக்கள், போலீஸ்காரர் கிஷோர் நாயுடு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.