வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவில் சேவைகளை நாடும் அதிக எண்ணிக்கையிலான மக்களை கருத்தில் கொண்டு, 2022.06.10ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 13/2022 இன் அறிவுறுத்தலுக்கு அமைய அரச அலுவலகங்களுக்கு விஷேட விடுமுறையாக அறிவிக்கப்பட்ட 2022 ஜூன் 13ஆந் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கொன்சியூலர் விவகாரப் பிரிவு அவசர விடயங்களுக்காக மாத்திரம் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
கொன்சியூலர் விவகாரப் பிரிவு பொசன் போயா தினத்தை முன்னிட்டு 2022 ஜூன் 14, செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு, வழக்கமான செயற்பாடுகளுக்காக 2022 ஜூன் 15, புதன்கிழமை திறக்கப்படும்.
அதேசமயம், யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் 2022 ஜூன் 13, திங்கட்கிழமை வரையறுக்கப்பட்ட சேவைகளுக்காக திறக்கப்படும்.
சேவைகளை நாடுபவர்கள் தமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பின்வரும் இலக்கங்களினுடாக அறிந்து கொள்ளலாம்.
· கொன்சியூலர் விவகாரப் பிரிவு – கொழும்பு 0112 338 812 / 0112 338 843
· பிராந்திய தூதரக அலுவலகம் – யாழ்ப்பாணம் 0212 215 970
· பிராந்திய தூதரக அலுவலகம் – மாத்தறை 0412 226 697
· பிராந்திய தூதரக அலுவலகம் – கண்டி 0812 384 410
· பிராந்திய தூதரக அலுவலகம் – திருகோணமலை 0262 223 182
· பிராந்திய தூதரக அலுவலகம் – குருநாகல் 0372 225 941
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூன் 12