மதுரவாயல் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனது காரை தானே உடைக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வருபவர் காமராஜ் என்கின்ற கருத்து காமராஜ். சின்னத்திரை நடிகரான இவர் பல்வேறு நாடகங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட இவர் தனக்கு சொந்தமான காரை தானே கல்லால் அடித்து உடைத்து அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளத்தில் ரொம்ப கோவக்கார இருப்பாரோ என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தனது சொந்தக் காரை தானே கற்களால் தாக்கி உடைத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM