இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் விதிமுறைகளை மீறி கல் குவாரி இயங்கியதால் விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கனிம கொள்ளை நிறுத்தப்பட வேண் டும். என்ஐஏ பல்வேறு இடங் களில் சோதனை நடத்தி வருவ தால் பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
2024 தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார். சீமான் முதலில் முருகரை ஏற்றுக்கொண்டார், பின்னர் சிவனை ஏற்றுக் கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் சேர்ந்து வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தலைநகரம் கொலை நகரமாக மாறி வருகிறது என்றார்.