உக்ரைன் போரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரித்தானிய ராணுவ வீரர்: ”உண்மையான ஹீரோ” என தந்தை உருக்கம்!


ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரில் களமிறங்கிய பிரித்தானிய ராணுவ வீரர் ஜோர்டான் கேட்லி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், அவருக்கு உக்ரைன் தலைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரானது, நான்கு மாதங்களை கடந்தும் இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது ரஷ்யாவின் தாக்குதலானது உக்ரைனின் தெற்குப் பகுதி நகரான செவரோடோனெட்ஸ்கில் ( Severodonetsk) தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்தநிலையில், செவரோடோனெட்ஸ்கில் ஜுன் 10ம் திகதி ரஷ்ய படைகளுக்கும், உக்ரைன் படைகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் பிரித்தானிய வீரர் ஜோர்டான் கேட்லி(24) சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜோர்டான் கேட்லி கடந்த மார்ச் மாதம் வரை பிரித்தானிய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அதிலிருந்து விடுப்பட்டு, ரஷ்யாவின் அத்துமீற தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனின் இராணுவ படையில் இணைந்து போர் தாக்குதலில் ஈடுபட்டார்.

ஜோர்டான் கேட்லி ரஷ்ய படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதுடன், உக்ரைனிய படை வீரர்களுக்கு மிகச்சிறந்த போர் நுணுக்கங்களையும் பயிற்சி அளித்தாக தெரியவந்துள்ளது.

பிரித்தானிய ராணுவ வீரர் ஜோர்டான் கேட்லியின் இறப்பு குறித்து அவரது தந்தை Dean வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், எனது மகன் ஜோர்டான் கேட்லி செவரோடோனெட்ஸ்கில் நடைபெற்ற சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அழிவுகரமான சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களைப் போலவே கேட்லியின் குழுவும் அவனை மிகவும் நேசித்ததாக கூறுகிறது, மற்றும் கேட்லி பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை செய்துள்ளான், படைவீரனாக மட்டுமில்லாமல் உக்ரைனிய படைகளுக்கு பயிற்சியும் அளித்துள்ளான் என தெரிவிததுள்ளார்.

கேட்லி, அவனது ராணுவ பணியை மிகவும் நேசித்தான், நாங்கள் கேட்லியை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறோம், அவன் உண்மையான ஹீரோ, என்றும் அவன் எங்களது இதயத்தில் வாழ்ந்து வருவான் என அவரது தந்தை முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

[S6PSIB}

வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், உக்ரைனில் இறந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர் கேட்லியின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக்(Mykhailo Podolyak) பிரித்தானிய வீரர் கேட்லிக்கு தனது புகழஞ்சலியை செலுத்தினார்.

உக்ரைன் போரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரித்தானிய ராணுவ வீரர்: ”உண்மையான ஹீரோ” என தந்தை உருக்கம்!

கூடுதல் செய்திகளுக்கு: சோவியத் கால ஏவுகணைகளுக்கு திரும்பும் ரஷ்யா: ஆயுதங்கள் தீர்ந்து வருவதால் உக்ரைன் வெற்றியில் தாமதம்!

கேட்லியின் இழப்பு குறித்து ட்விட் செய்துள்ள மைக்கைலோ போடோலியாக், தனது தனிப்பட்ட நம்பிக்கைக்காக பல மைல் கடந்து செல்வதற்கு மிக தைரியம் இருக்க வேண்டும், ஜோர்டான் கேட்லி மிகவும் உண்மையான ஹீரோ, உக்ரைன் மற்றும் உலக சுகந்திரத்திற்கான அவரது சேவையை உக்ரைன் என்றும் நினைவில் நிறுத்தும் என தெரிவித்துள்ளார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.