டெல்லியில் முக்கிய சந்தைப் பகுதியான கரோல் பாக் பகுதியில் உள்ள கப்பார் சந்தையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து 39 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
தீ விபத்தின்போது கடைகளில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் தீ விபத்தில் 16 கடைகள் முழுவதுமாக தீக்கரையாகின என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.