நம்மில் பலர் இப்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உடல் ஆரோக்கியத்திற்காக சுகர் ஃபிரீ உணவுகளைத்தான் சாப்பிடுகின்றனர். இதனால் நம்மில் பலருக்கு சுகர் ஃபிரீ உணவுகளை எப்படி வீட்டில் செய்வது என்று தெரியாது. நம்மில் பலர் ஐஸ்கிரீம் என்றாலே மிகவும் புடிக்கும். அதிலும் மாம்பழம் ஐஸ்கிரீம் என்றாலே நம்மில் பலருக்கு பிடிக்கும். அதை எப்படி வீட்டிலே செய்வது என்று பார்க்கலாமல்.
6 – 7 மாம்பழங்கள் வரை எடுத்துகொள்ளவும். இந்த மாம்பழங்களை நீரில் சில நேரம் போட்டுவிடுங்கள். சிறிது நேரம் கழித்து நீரை வடிகட்டிய பிறகு மாம்பழங்களின் தோலை நீக்கிவிட்டு, மாம்பழங்களின் கொட்டையை நீக்கிவிடவும். தற்போது மாம்பழத்தை மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும். தற்போது கிடைத்த மாம்பழம் கலவையை குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும்.
175 கிராம் பிரஷ் க்ரீமை எடுத்துகொள்ளவும். அதை நன்றாக ஒரு ஸ்பூனை வைத்து அடித்துக்கொள்ளவும். தற்போது வெண்ணிலா எசன்ஸ் அதில் சேர்த்துகொள்ளவும். தற்போது இந்த க்ரீம் கலவை நுரைவரும் வரை அடித்துகொண்ட பிறகு 4 ஸ்பூன் தேன்னை சேர்த்து அடித்துகொள்ளவும். 3 நிமிடங்கள் வரை அடித்துக்கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் குங்குமப் பூ சேர்த்த சுடு பாலை இந்த கலவையுடன் சேர்த்துக்கொள்ளவும். தற்போது குளிர் சாதனப்பெட்டியில் இருந்த மாம்பழக் கலவையை இதில் சேர்த்துக்கொள்ளவும். தற்போது 3 முதல் 5 நிமிடங்கள் வரை அடித்துக்கொள்ளவும். தற்போது இந்த கலவையை ஐஸ்கிரீம் செய்யும் பாத்திரத்தில் நிரப்பவும். சுமார் 3 மணி நேரம் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
3 மணி நேரம் கழித்து மீண்டும் இந்த கலவையை நன்றாக அடித்துகொள்ளவும். தற்போது ஐஸ்க்ரீம் பதத்திற்கு வந்துவிடும். தற்போது கை நிறிய பாதம், பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ், உலர்ந்த பழங்கள் சேர்த்துகொள்ளவும். தற்போது இரவு முழுவதும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.