உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்ற கால்பந்தாட்டப்போட்டியில் இலங்கை – தாய்லாந்து அணியை எதிர்கொண்ட போது 2ற்கு பூச்சியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
2023ம் ஆண்டு ஆசிய வெற்றிக் கிண்ண போட்டிக்கு தகுதிபெறும் போட்டியில் 3வது சுற்றில் இலங்கை போட்டியிட்ட இரண்டாவது போட்டி இதுவாகும்.
முதலாவதுபோட்டியில் இலங்கைஉஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டு தோல்வி கண்டது. தோல்வியடைந்த போதிலும் இலங்கை அணியின்ஆற்றல் உயர்மட்டத்தில் பதிவாகியிருந்தது.
இலங்கை எதிர்கொள்ளவுள்ள அடுத்த போட்டி நாளைமறுதினம் இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மாலைதீவு அணியை இலங்கை அணிஎதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.