ஜெயிலர் ஆகும் ரஜினி
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் தனது 169வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. மேலும் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன். இப்படம் சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி உருவாகிறதாம். அதனால் அனைத்து மொழிகளுக்கும் ஏற்றபடி படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.