புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் கிராம சுயாட்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, நாட்டின் வளர்ச்சிக்காக கிராம தலைவர்கள் ஆற்றிவரும் பங்கை பாராட்டி அவர்களுக்குப் பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். தங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் யோகா பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். சர்வதேச யோகா தினத்தன்று, யோகா பயிற்சி மேற்கொள்ள ஊரில் உள்ள பழமையான அல்லது சுற்றுலா தலம் அல்லது நீர்நிலைகளை தேர்ந்தெடுக்கலாம். பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை மற்றவர்களுக்கு அனுப்பி வையுங்கள். அது அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
உலகம் முழுவதும் மக்கள் சர்வதேச யோகா தினத்தை உற்சாகமுடன் கொண்டாடுகின்றனர். இதற்கு முந்தைய ஆண்டு களில் பலர் ஆகாயம், இமயமலை மற்றும் கடல் என பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சி செய்வது போன்ற புகைப் படங்களை பகிர்ந்து இந்தியர்களை பெருமைப் படுத்தி உள்ளனர்.
ஆண்டுதோறும் ஒரு கருப் பொருளில் யோகா தினம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ‘மனிதர்களுக்கு யோகா’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட உள்ளது. சமீபத்தில் பரவிய கரோனா பெருந்தொற்று, வாழ்க் கைக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை மனிதர்களுக்கு உணர்த்தியது. இதில் யோகா பயிற்சிக்கு எவ்வளவு பெரிய பங்கு உள்ளது என்பதையும் உணர்த்தியது.
தண்ணீர் பஞ்சம் பெருகி வரும் சூழலில், ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இதற்காக மழை நீரை சேமிக்க வேண்டும். எனவே, கிராம தலைவர்கள் இதற்கான கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.
இந்த இலக்கை எட்டுவதற் காக, 75-வது சுதந்திர தினத்தை கொண் டாட உள்ள நிலையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ஏரிகளை உருவாக்க தீர் மானிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் தகுதியுடைய அனைவருக்கும் கிடைக்க வேண்டியது அவசியம். இதை உறுதி செய்வதில் கிராம தலைவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. கிராமங்களில் உள்ள தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் முழு மையாக கிடைத்தால் அந்த கிராமம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாடும் வளம் பெறும்.
தூய்மை இந்தியா திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தேவை யான நடவடிக்கைகளை கிராம தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். கிராம சுயாட்சி மற்றும் கிராமங்களுக்கு ஜன நாயக அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் நம் நாடு புதிய மைல் கல்லை எட்டி உள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தற்காக நமது சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஆஷா பணியாளர்களை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பாராட்டி கவுரவித்தது. இதுகிராமங்களுக்கு பெருமை தரும்விஷயம். இந்த ஆண்டில் பருவமழை சிறப்பாக அமைய விவசாயிகளுக்கு வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.-பிடிஐ