சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் லாக் அப் மரணம் என்பது தொடர்கதையாகி வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு சிறை மரணம் குறைவதாக இல்லை. அண்மையில் சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் விசாரணையின் போது உயிரிழந்தார்.
அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ஒரு உயிரிழந்துள்ளார்.
விசாரணை கைதி ராஜசேகர் என்பவரிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த ராஜசேகர் தொடையில் காயம் இருந்ததாக தகவல் வெளியானது. விசாரணை கைதி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ன், காவலர் சத்திய மூர்த்திய ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
newstm.in