இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் பியூஷ் கோயல், கொரோனா காலத்தில் ஏழை நாடுகளின் மக்கள் ஆரோக்கியத்தை காக்க உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டதாக சாடினார்.
தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று பியூஷ் கோயல் கூறினார். எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும், அழுத்தத்தில் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.
மீனவர்களுக்கான மானியத்தை குறைப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் முன்மொழிவுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பு தெரிவித்தார்.