லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நந்தம் பகுதியில் சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நட்டறாம்பள்ளி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் சொகுசு பஸ் ஓட்டுனரின் கவனக் குறைவால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்