ஆமதாபாத் : குஜராத்தில் அரிசி பாக்கெட்டில் இருந்த போதைப் பொருளை, எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்ட கடற்கரையோரம் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அப்போது, ‘கோப்ரா பிராண்ட் கோஹினூர் பாஸ்மதி ரைஸ்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருந்த, 10 அரிசி பாக்கெட்டுகள் கரை ஒதுங்கியிருந்தன.அவற்றைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்ததில், போதைப் பொருட்கள் இருந்தன. அவை, பாகிஸ்தான் பகுதியில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடக்கிறது.
மும்பை மஹாராஷ்டிர மாநிலம் மும்பை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், கூரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வைக்கப்பட்டு இருந்த குடிநீர் சுத்திகரிக்கும் சாதனத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 4.88 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஆமதாபாத் : குஜராத்தில் அரிசி பாக்கெட்டில் இருந்த போதைப் பொருளை, எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.குஜராத் மாநிலம் கட்ச் மாவட்ட கடற்கரையோரம் எல்லைப் பாதுகாப்பு படையினர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.