ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் 3 வயது சிறுமியை மர்ம பெண் கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மிர்சாவலி- ஹூசைன் தம்பதியினருக்கு 3 வயதில் ஷபிதா என்ற மகள் உள்ளார். கடந்த 8ம் தேதி ஷபிதா தாயுடன் ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போனார்.
புகாரின்பேரில் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது ஷபிதாவை மர்ம பெண் ஒருவர் அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக 3 தனிப்படை அமைத்து குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது .