ஈரோடு அருகே சாலை விபத்தில் கரும்பு டிராக்டர் மோதி 4 வயது குழந்தையும், அவரது தாயும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பூந்துறைசேமூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவர், தனது 4 வயது குழந்தை சுகுதியுடன் தனது இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சி நோக்கி நேற்று இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். பட்டறை வேலம்பாளையம் பகுதியில் சென்றபோது முன்னால் சென்றுகொண்டிருந்த கரும்பு பாரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த டிராக்டரை முந்த கோமதி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்திசையில் மற்றொரு இருசக்கர வாகனம் வருவதை அடுத்து நிலைதடுமாறியுள்ளார் கோமதி.
இதில் கோமதி டிராக்டரின் இடையில் விழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் டிராக்டரின் சக்கரம் தாய் கோமதி மற்றும் மகள் சுகுதி மீது ஏறி இறங்கி உள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: சாம்ராஜ்
இதையும் படிங்க… நேஷனல் ஹெரால்டு வழக்கு: இன்று ஆஜராகிறார் ராகுல்! டெல்லி காங்கிரஸ் பேரணிக்கு அனுமதி மறுப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM