டாப் 100 நிறுவனங்களின் சந்தை மதிப்பு $31.7 டிரில்லியனை எட்டி சாதனை.. லிஸ்டில் 2 இந்திய நிறுவனங்கள்!

சர்வதேச அளவிலான 100 நிறுவனங்களின் சந்தை மூலதனம் 10.3 டிரில்லியன் டாலரில் இருந்து, 3 மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 31.7 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இது மார்ச் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் 48% அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் 2.85 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முத இடத்தினை பிடித்துள்ளது..

முதலிடத்தில் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தினை தொடர்ந்து, சவுதி அராம்கோ, மைக்ரோசாப்ட், ஆல்பாஃபெட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்காள் இடம்பெற்றுள்ளதாக PwC தரவு கூறுகின்றது.

மிகப்பெரிய மூலதனத்தினை வளர்ச்சி கண்டு ஆப்பிள் நிறுவனம் முதல் இடத்திற்கான மகுடத்தினை சூடியுள்ளது.

இந்திய நிறுவனங்கள் உண்டா?

இந்திய நிறுவனங்கள் உண்டா?

இந்த பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 58வது இடத்தையும், டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் 69வது இடத்தினையும் பிடித்துள்ளன. 100 நிறுவனங்களில் வெறும் 2 இந்திய நிறுவனங்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம் சங்கிற்கு பின்னடைவு
 

சாம் சங்கிற்கு பின்னடைவு

இந்த பட்டியலில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 22வது பெரிய நிறுவனமாக உள்ளது. இது முந்தைய ஆண்டினை விட 7 இடங்கள் தள்ளி பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது மார்ச் நிலவரப்படி, 342 பில்லியன் டாலராகும்.

அமேசான் நிலவரம்

அமேசான் நிலவரம்

தாய்வான் செமிகண்டக்டர் நிறுவனம் 10வது இடத்தினை பிடித்துள்ளது. இதன் சந்தை மூலதனமானது 541 பில்லியன் டாலராகும். கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த நிறுவனம் ஒர் இடம் மேலாக முன்னேறியுள்ளது.

அமேசானின் சந்தை மூலதனம் மார்ச் 2021ம் ஆண்டில் 61% அதிகரித்துள்ளது. எனினும் இது 4வது இடத்தில் இருந்து முன்னேற்றம் காணவில்லை.

 டெஸ்லா

டெஸ்லா

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மூலதனம் 641 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது மார்ச் 2020ல் 96 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வருடத்தில் 565% அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 100 Global firms market cap reaches 31.7 trillion dollar, Are there any Indian companies on the list?

The market capitalization of 100 international companies has more than tripled from $ 10.3 trillion to $ 31.7 trillion. India’s Reliance Industries is ranked 58th and TCS 69th on the list.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.