80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க 3 நாட்களாக போராட்டம்! உள்ளே இருந்து தைரியமாக செய்யும் காரியம்


இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜன்ஜ்கிர் சம்மா மாவட்டத்தில், மூடப்படாமல் கைவிடப்பட்ட, 80 அடி ஆழ்துளை கிணறு ஒன்றில், ராகுல் என்ற 10 வயது சிறுவன் தவறி விழுந்தான்.

அவனுக்கு காது கேட்காது, பேசவும் முடியாது. இவனை மீட்கும் பணியில், மாநில பேரிடர் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் குழுவினர் 55 மணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர்.

80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க 3 நாட்களாக போராட்டம்! உள்ளே இருந்து தைரியமாக செய்யும் காரியம்

அவர்களுடன் குஜராத்தில் இருந்து வந்த ரிமோட் கன்ட்ரோல் ரோபோ மீட்பு குழுவும் இணைந்துள்ளது.
சிறுவனை மீட்க ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஜேசிபி இயந்திரம் மூலம் மற்றொரு குழியும் தோண்டப்படுகிறது. மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளது.

இதனிடையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உள்ளே இருந்து தைரியமாக செய்யும் காரியம் மீட்புக்குழுவினரை வியக்க வைத்துள்ளது.
அதன்படி மூன்று நாட்களாக ஆழ்துளை கிணற்றில் தவிக்கும் நிலையிலும் சிறுவன் மன தைரியத்துடன் காணப்படுகிறான்.

மீட்புக்குழுவுக்கு நல்ல ஒத்துழைப்பை வழக்கும் சிறுவன் தண்ணீரை தானே வெளியேற்றுவது, மற்றும் மீட்புக்குழுவினர் தந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது என செய்து வருகிறார்.

அவரை வெகுசீக்கிரம் மீட்டு விடுவோம் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க 3 நாட்களாக போராட்டம்! உள்ளே இருந்து தைரியமாக செய்யும் காரியம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.