டெல்லி: அமைச்சர் சத்யேந்திர ஜெயினை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஹவாலா பண மோசடி வழக்கில் அமலாகத்துறையினர் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் ரூ.2.82 கோடி பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 13-ம் தேதி வரை, மேலும் 5 நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில், இன்றுடன் அமலாக்கத்துறை காவல் முடிந்ததால் டெல்லி அமைச்சர் சுகாதாரத்துறை சத்யேந்திர ஜெயினை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.