Aadhaar Card: வீட்டிற்கே வருது ஆதார் சேவை – இனி வீண் அலைச்சல் எதற்கு?

Aadhaar Card Update: ஒன்றிய அரசு கொண்டுவந்த ஆதார் கட்டாயம் என்ற உத்தரவைத் தொடர்ந்து, முக்கிய ஆவணங்களில் ஆதாரும் ஒன்றாக மாறியது. இந்த ஆதார் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள மக்கள் சேவை மையத்தை நோக்கி அலைவதால், அவற்றிற்கு தீரிவு காண அரசு ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.

அதன்படி, வீடுகளுக்கே சென்று ஆதார் அட்டையில் இருக்கும் திருத்தங்கள் சரிசெய்து தரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெளியான அறிக்கையின்படி, UIDAI தற்போது 48,000 இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் தபால்காரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

பயிற்சிக்குப் பிறகு, தபால்காரர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து ஆதார் சேவைகளை வழங்குவார்கள். தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் அதிகமான மக்களைச் சென்று தொடர்புகொள்வதற்கும், மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது, ஆதார் விவரங்களைப் புதுப்பித்தல், குழந்தைகளுக்கு ஆதார் அட்டை என பல சேவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Aadhaar Card: ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பிடிக்கவில்லையா? இப்படி செய்தால் மாற்றலாம்!

தபால்காரர்களுக்குப் பயிற்சி

அறிக்கையின்படி, 1.5 லட்சம் அஞ்சல் அலுவலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தபால்காரர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப்லெட் அடிப்படையிலான ஆதார் கிட் உள்ளிட்ட பொருத்தமான டிஜிட்டல் உபகரணங்களை UIDAI வழங்கும்.

Useful Apps: இந்தியர்கள் இந்த 5 செயலிகளை வைத்திருப்பது அவசியம்!

இதன் மூலம் அவர்கள் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் தகவல்களைப் புதுப்பிக்கலாம் அல்லது குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டையை பதிவு செய்து தரலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அலுவலர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

விரிவுப்படுத்தப்படும் ஆதார் மையம்

இது தவிர, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொது சேவை மையத்தில் பணிபுரியும் சுமார் 13,000 பணியாளர்களும் இந்த சேவைக்காக அங்கீகரிக்கப்படுவார்கள்.

தரவுகள் விரைவாகப் புதுப்பிப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக, நாட்டின் 755 மாவட்டங்களிலும் ஆதார் சேவை மையத்தை நிறுவ யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

ஒரு ஆதார் அட்டையானது, ஆணையத்தால் வகுக்கப்பட்ட சரிபார்ப்பு முறைக்குப் பிறகு, இந்திய குடிமக்கள் எனும் அதிகாரத்திற்காக 12 இலக்க ரேண்டம் எண் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் வசிப்பவராக இருக்கும் எந்தவொரு தனிநபரும், வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், ஆதார் எண்ணைப் பெறலாம்.

பதிவுசெய்ய விரும்பும் நபர்கள், பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு தனிநபர் ஒருமுறை மட்டுமே ஆதார் பதிவு செய்ய வேண்டும். மேலும், இது முற்றிலும் இலவசமாக கிடைக்கும் அடையாளச் சான்றாகும். அரசின் முயற்சியால் ஆதார் அட்டை திருத்தம் என்பது இனி எளிதாகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.