நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை உதவி இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரி ராகுல்காந்தியிடம் கேள்விகளை கேட்டு வருகிறார். ராகுல் காந்தி அளிக்கும் பதில்களை மற்றொரு அதிகாரி பதிவு செய்து வருகிறார். ராகுல்காந்தியிடம் 5 அல்லது 6 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.