ஈரோடு மாவட்டத்தில் சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றிய முதியவர் உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கூகலூர் அரிஜன காலனி பகுதியை சேர்ந்த மாகாளிக்கு (வயது 57) இரண்டு மனைவிகள் உள்ளனர்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவிகளை பிரிந்து சத்தியமங்கலம் அடுத்த வேலங்காட்டு பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி மாகாளி கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மாகாளி வழக்கம்போல் நேற்று சமையல் செய்து கொண்டு இருக்கும் போது, மாகாளியின் வேட்டியில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து உள்ளது.
இதில் அவருக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரை மருத்துவமனைக்கு யாரும் கொண்டு செல்லவில்லை என்பதால், வீட்டில் இருந்த அவர் உடல்நலம் மோசமாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.