ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஒடிசாவில் இருந்து விஜயவாடாவுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றது. அதிகாலையில் ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே அல்லூரி பகுதியில் சென்றபோது, நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இது குறித்து தகவலறிந்து சென்ற காவல் துறையினர், விபத்தால் படுகாயமடைந்தவர்களை மீட்டு பத்ராச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
2 குழந்தைகள் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் ஒடிசாவை சேர்ந்தவர்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க… உறவுக்கார பெண் மரணம்! மனவேதனையில் எரியும் சிதையில் குதித்து உயிரை மாய்த்த இளைஞர்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM