உக்ரைன் போர் தொடங்கிய நூறு நாட்களில் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி மூலம் ரஷ்யா 9800 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பின்லாந்தைச் சேர்ந்த எரியாற்றல் மற்றும் தூய காற்றுக்கான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதியில் 61 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சீனா, ஜெர்மனி, இத்தாலி ஆகியன ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாகவும், ஏற்றுமதிப் பொருட்களின் விலை கடந்த ஆண்டைவிட 60 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.