கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள கடுகதி ரயில் சேவை


எதிர்வரும் புதன்கிழமை(15) தொடக்கம் கொழும்பில் இருந்து கண்டி வரையான ரயில் பயணச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கடுகதி ரயில் காலை 5.20 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணியளவில் கண்டியைச் சென்றடையும் என கூறப்படுகின்றது.

கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள கடுகதி ரயில் சேவை

இது தொடர்பாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக பிரசாத் தெரிவிக்கையில்,

குறித்த ரயில் கம்பஹா, ​வேயன்கொடை, பொல்கஹவெல, றம்புக்கனை, பேராதனை மற்றும் சரசவி உயன ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் தரித்துச் செல்லும்.

அத்துடன் நாளை மாலை 4.45க்கு கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள கடுகதி ரயில் சேவை

இதற்கிடையே அவிசாவளை தாண்டி கஹவத்தை, வக பிரதேசத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காலை நேர கடுகதி ரயில் சேவையொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு வரப்பிரசாதமாக இந்த ரயில் சேவை அமையும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.