நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் 5-வது முறையாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகியப் படங்களுக்குப் பிறகு, சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக உருவாகியுள்ள படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
‘மாமனிதன்’ படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்தப்படம், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் ரிலீசாகாமல் இருந்து வந்தது. இதையடுத்து ‘தர்மதுரை’ படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், ‘மாமனிதன்’ படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றார்.
இதையடுத்து படத்தை வெளியிடும் பணிகள் வேகம் பிடித்த நிலையில், முதலில் மே 6-ம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ரிலீஸ் தேதி மே 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டநிலையில், அந்த தேதியும் மாற்றப்பட்டு 3-வது முறையாக ஜுன் 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர், ரிலீஸ் தேதிக்கு ஒருநாள் முன்னதாக ஜுன் 23-ம் தேதி வெளியாவதாக போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி மீண்டும் ஜுன் 24-ம் தேதிக்கு ‘மாமனிதன்’ ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
. @seenuramasamy ‘s #Maamanithan to have a grand release on June 24.#MaamanithanFromJune24@ilaiyaraaja & @thisisysr Musical
A @studio9_suresh Release @YSRfilms @SGayathrie @gurusomasunder @Shajichen @jewelmary5 @pavijay @karunakaran @Muthusirpi @mynnasukumar pic.twitter.com/qPY48WJ2cv
— VijaySethupathi (@VijaySethuOffl) June 12, 2022