பிரித்தானியா ஸ்தம்பிக்கும்… 100 ஆண்டுகளில் முதன்முறை: நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை


பிரித்தானியா சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்னர் பொது வேலை நிறுத்தம் காரணமாக ஸ்தம்பிக்கப்போவதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் ஜூன் மாதத்தில் 3 நாட்கள் ரயில் சேவைகளை ஸ்தம்பிக்க வைப்பதாக RMT அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் சட்டத்தின் படி அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என அரசாங்கம் உறுதியாக உள்ளது.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களை ஆதரித்து எஞ்சியவர்களும் களமிறங்கும் செயல் சட்டத்திற்கு புறம்பானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஸ்தம்பிக்கும்... 100 ஆண்டுகளில் முதன்முறை: நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை

பிரித்தானியாவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ரயில் சேவை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக களமிறங்க உள்ளன.
இதனால், மூன்று நாட்கள் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவை பொறுத்தமட்டில், 1926ல் தான் இறுதியாக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொழிற்சங்கங்கலின் அதிகார வரம்பை ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதமர் அலுவலகத்தின் கோரிக்கையை தொழிற்கட்சி நிராகரித்துள்ளது.

ஆயிரக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் ஜூன் 21ம் திகதி முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
ஜூன் 22 மற்றும் 25ம் திகதியும் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பிரித்தானியா ஸ்தம்பிக்கும்... 100 ஆண்டுகளில் முதன்முறை: நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.