குக் வித் கோமாளி 3
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
தொடர்ந்து மூன்று சீசன்களாக மக்களுக்கு பிடித்த செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருக்கிறார்கள்.
12 குக் கலந்துகொண்ட இந்த குக் வித் கோமாளி 3ல் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.
இந்நிலையில், இதில் இன்று இம்யூனிட்டிகாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக, விஷயம் ஒன்று நடந்துள்ளது.
முதல் Finalist
அதாவது, இன்று இம்யூனிட்டியை வெல்லும் நபர், குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் டாப் 5 இடம்பெறுவார் என அறிவித்துள்ளனர்.
அதன்படி, அருமையாக சமைத்து நடுவர்களின் மனதை வென்று, இம்யூனிட்டியை தட்டிச்சென்று முதல் ஆளாக Finalist ஆகியுள்ளார் ஸ்ருதிகா.
இதன்முலம் ஸ்ருதிகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் Finalist-ஆகியுள்ளார்.
தன்னை முதல் Finalist என்று நடுவர் சொன்னவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார் ஸ்ருதிகா.