அமெரிக்காவின் மே மாத சில்லறை பணவீக்கம் 40 ஆண்டுக் காலச் சரிவை அடைந்துள்ளது, இதன் வாயிலாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டியை உயர்த்துவது கட்டாயமாகி உள்ளதாலும், சீனாவின் முக்கிய வர்த்தக நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது, இதனால் சீனாவின் உற்பத்தி மற்றும் விநியோகம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும்.
இந்தியாவிலும் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறையா?
இதன் வாயிலாகவே ஆசிய பங்குச்சந்தை மொத்தமும் சரிந்துள்ளது இதைத் தொடர்ந்து ஏற்கனவே அதிகளவிலான தடுமாற்றத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை தற்போது கடும் சரிவை எதிர்கொண்டு உள்ளது.
சென்செக்ஸ்
இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே 1400 புள்ளிகள் சரிவில் துவங்கிய சென்செக்ஸ், 1568 புள்ளிகள் வரையில் சரிந்து அதிகப்படியாக 52,734.98 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் வாயிலாகச் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களும் சரிவை எட்டியது.
முக்கிய நிறுவனங்கள்
குறிப்பாக வங்கி மற்றும் நிதியியல் சேவை குறியீடுகள் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. பஜாஜ் பின்சர்வ் பங்குகள் 5.16 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் டெக் மஹிந்திரா, டிசிஎஸ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் இண்டஸ்இந்த் பங்குகள் சரிவு
அமெரிக்கப் பணவீக்கம்
ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு அமெரிக்காவின் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் பணவீக்கம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.
சீனா
இதேவேளையில் சப்ளை செயின் பாதிப்பில் முக்கியக் காரணமாக இருந்த சீனாவின் லாக்டவுன் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது கட்டாயம் உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்தும்.
ஆசிய சந்தை
இந்தச் சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஆசிய சந்தை மொத்தமும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்திய பங்குச்சந்தையும் 2 சதவீதம் வரையில் சரிந்து அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. மேலும் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 78 ரூபாய்க்கு மேலும், ஜப்பான் யென் 20 வருட சரிவையும் பதிவு செய்துள்ளது.
இறக்குமதி பொருட்கள்
இதனால் கச்சா எண்ணெய் முதல் ஸ்மார்ட்போன் வரையில் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்க உள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள இந்திய நடுத்தர மக்கள் கூடுதலான பாதிப்புகளை எதிர்கொள்ள உள்ளனர்.
ஆசிய சந்தை
ஆசிய சந்தை 2.7 சதவீதம் சரிவு, அமெரிக்காவின் பியூச்சர் குறியீடு 1.3 சதவீதம் வரையில் சரிவு இதில் தாக்குப்பிடிக்க முடியாத சென்செக்ஸ், நிஃப்டி காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர்ந்து சரிவைப் பதிவு செய்து வருகிறது.
Sensex fall upto 1568 pts and Nifty slides below 15,800; What investors need to know
Sensex fall upto 1568 pts and Nifty slides below 15,800; What investors need to know 1570 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. என்ன காரணம் தெரியுமா..?!