பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று கேரளா புறப்பட்டுச் சென்றனர்.
இவர்களது திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. பின்னர் இருவரும் தம்பதி சகிதமாக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்ல முடிவு எடுத்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று விமானம் மூலம் கொச்சி சென்றனர்.
அங்கு அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து திருவல்லாவுக்கு தம்பதியினர் புறப்பட்டு சென்றனர்.