உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய பெண் கவுன்சிலரின் மகன்..

சேலம் மாவட்டத்தில், உணவக உரிமையாளரை சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படும் பெண் கவுன்சிலரின் மகன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரவிந்த் என்ற அந்த நபர், தாரமங்கலத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்ற போது உரிமையாளர் செந்தில் குமார் கண்டிப்புடன் பேசி பணத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் இரவு குடிபோதையில் கூட்டாளிகள் 10 பேருடன் மீண்டும் வந்த அரவிந்த், வித விதமாக ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு இறுதியாக ஆம்லெட் வேகவில்லை என கூறி செந்தில் குமாரை சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

கண் மற்றும் நுரையீரல் பகுதியில் காயங்களுடன் செந்தில் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரவிந்த் உள்பட 4  பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.