கமல்ஹாசன் – சிரஞ்சீவி 36 வருடப் புகைப்படம் : ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தமிழ்த் திரையுலகத்தில் சீனியர் நடிகராக கமல்ஹாசன், தெலுங்குத் திரையுலகத்தில் சீனியர் நடிகராக சிரஞ்சீவி இருவரும் இருக்கிறார்கள். இருவருமே தமிழ் சினிமா இயக்குனரான கே பாலசந்தர் இயக்கத்தில் நடித்தவர்கள். கே பாலசந்தர் இயக்கிய '47 நாட்கள்' என்ற படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் கமல்ஹாசனும், சிரஞ்சீவியும் சந்தித்துப் பேசியபோது கே பாலசந்தர் பற்றியும், அவர்களது பழைய நாட்களைப் பற்றியும் பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் 36 வருடங்களுக்கு முன்பு 1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'சுவாதி முத்யம்' படத்தின் வெற்றி விழாவில் கமல்ஹாசன், சிரஞ்சீவி கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த விழாவில் ஹிந்தி நடிகரான ராஜ் கபூர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். கடந்த பல வருடங்களாக கமல்ஹாசனும், சிரஞ்சீவியும் எந்த அளவிற்கு நட்பாக உள்ளார்கள் என 1986ல் எடுத்த புகைப்படத்தையும், இரு தினங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.