வேலூரில் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அங்கு சீருடைய அணியாமல் வந்த மாணவர்களை அழைத்து சீருடைய அணியாமல் ஏன் வந்தீர்கள் தலைமுடியை கூட வெட்டவில்லை என கடிந்துகொண்டார்.
அதே போல் ஆசிரியர்களையும் அழைத்து மாணவர்களை ஒழுக்கப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு நீங்கள் அமைதியாக இருப்பதால் தான் மாணவர்கள் இது போன்று ஒழுங்கீனமாக இருப்பதாகவும் ஆசிரியர்கள் மாணவர்களை திருத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார்.
மேலும், வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கினர்.